இந்தியா

ராஜ் தாக்கரேயின் இல்லத்தில் சோதனை நடத்த முடியுமா?: மகாராஷ்டிர அரசுக்கு என்.சி.பி. சவால்

DIN


பாஜகவுக்கு எதிராக செயல்படும் மகாராஷ்டிர நவநிர்மான் சேனை கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேயின் இல்லத்தில் சோதனை நடத்த முடியுமா? என்று மகாராஷ்டிர அரசுக்கு  தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி.) சவால் விடுத்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு ராஜ் தாக்கரேயின் கட்சி ஆதரவளித்தது. எனினும், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை ராஜ் தாக்கரே கட்சி எதிர்க்கிறது. பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும்படி தமது கட்சியினரை ராஜ் தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை சுட்டிக்காட்டி, மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும்படி தமது கட்சியினரிடம் ராஜ் தாக்கரே கூறியுள்ளார். இதற்காக அவரது இல்லத்தில் மகாராஷ்டிர அரசால் சோதனை நடத்த முடியுமா? துணிச்சல் இருந்தால், ராஜ் தாக்கரே இல்லத்தில் சோதனை நடத்தட்டும்.
பாஜகவுக்கு ஆதரவாக கடந்த தேர்தலில் ராஜ் தாக்கரே பிரசாரம் செய்தார். இம்முறை பாஜகவை அவர் எதிர்க்கிறார். இதனால் அவரது தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு ஆகும் செலவு குறித்து கேள்வியெழுப்பப்படுகிறது என்றார் நவாப் மாலிக்.
முன்னதாக, மகாராஷ்டிர தலைமை தேர்தல் அதிகாரிக்கு பாஜக கடந்த சனிக்கிழமை கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், மக்களவைத் தேர்தலில் ராஜ் தாக்கரே கட்சி போட்டியிடவில்லை. அப்படியிருக்கையில், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ராஜ் தாக்கரே பிரசாரம் செய்கிறார். 
ராஜ் தாக்கரேயின் பிரசாரக் கூட்டத்துக்கு ஆகும் செலவு, எந்த மக்களவைத் தொகுதி வேட்பாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்? என கேள்வி எழுப்பியிருந்தது. இந்த சூழ்நிலையில், ராஜ் தாக்கரே இல்லத்தில் சோதனை நடத்த முடியுமா? என்று மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT