முகப்பு
இந்தியா

20 ஆண்டுகள் ஆனாலும் ராகுலால் பிரதமர் ஆக முடியாது: சாபம் விடும் சகோதரர்

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எந்த வகையிலும் ஈடாக மாட்டார் என்று பாஜக வேட்பாளர் வருண் காந்தி கூறியுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:42 AM
பகிர்:


பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எந்த வகையிலும் ஈடாக மாட்டார் என்று பாஜக வேட்பாளர் வருண் காந்தி கூறியுள்ளார்.

39 வயதாகும் பாஜக வேட்பாளரான வருண் காந்தி பொதுவாகவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த தனது சகோதர சகோதரியான ராகுலையும், பிரியங்காவையும் விமரிசிப்பதை தவிர்த்தே வருவார்.

ஆனால் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வருண் காந்தி, பிரதமர் மோடிக்கு ராகுல் எந்த வகையிலும் ஈடாக மாட்டார். இப்போது மட்டும் அல்ல இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் கூட ராகுல் காந்தியால் பிரதமர் ஆக முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ஒருவேளை வரும் தேர்தலில் ராகுல் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டால் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் ஒன்றும் ஜோதிடன் கிடையாது. ஆனால் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு அவர் பிரதமராக முடியாது என்று பதிலளித்தார்.

இந்த நாட்டு மக்கள் மோடிக்காக வெறும் வாக்கினை மட்டுமல்ல, தங்களது ரத்தத்தைக் கூட தியாகம் செய் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →