இந்தியா

மம்தா முதலில் சாரதா நிதி நிறுவன மோசடி ஆதாரத்தை கண்டுபிடிக்கட்டும்: பிரதமர் மோடி தாக்கு

ANI

பாலகோட் விமானப்படைத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் மம்தா பானர்ஜி, முதலில் சாராதா நிதிநிறுவன மோசடி ஆதாரத்தை கண்டுபிடிக்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி பதிலடி அளித்தார். இதுதொடர்பாக மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

பல ஆண்டுகளாக பதவியில் இருந்தும் மேற்கு வங்கத்தின் வறுமை நிலையை மம்தா ஒழிக்கவில்லை. மாநில மக்களின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. அதிலும், மேற்கு வங்கத்தின் மாதிரியை ஒட்டுமொத்த தேசத்துக்கும் அமல்படுத்தப்போவதாக மம்தா சூளுரைக்கிறார். அப்படியென்றால் நாடு முழுவதும் உள்ள ஏழைகளை அதே ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்க நினைக்கிறாரா மம்தா?

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரிவினை அரசியலை மட்டுமே ஏற்படுத்தி வந்தது. ஆனால், பாஜக-வின் கொள்கை ஏழைகளின் வளர்ச்சியில் உள்ளது. எனவே இந்த முறை வளர்ச்சியின் வேகத்தடையான மம்தாவுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். 

வருகிற மே 23-ஆம் தேதி மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் போது, இங்குள்ள சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும். மாநில வளர்ச்சிக்கு பதிலாக மக்கள் பணத்தை கொள்ளையடித்து மம்தா தன்னை மட்டுமே வளர்த்துக்கொண்டார். அதிலும் முதல் இரண்டுகட்ட தேர்தலுக்குப் பிறகு மம்தா தனது தூக்கத்தை கூட தொலைத்துவிட்டார்.

பாலகோட் விமானப்படைத் தாக்குதல் நடந்தவுடன் அதற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்ட மம்தா பானர்ஜி, முதலில் சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பான ஆதாரங்களை கண்டுபிடிக்கட்டும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT