இந்தியா

பயங்கரவாத தாக்குதல்: இலங்கையை முன்கூட்டியே எச்சரித்த இந்தியா

DIN

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து இலங்கைக்கு இந்திய உளவு அமைப்புகள் இம்மாத தொடக்கத்திலேயே எச்சரிக்கை விடுத்திருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் ஹிந்து மத முக்கியத் தலைவர்கள், ஹிந்து மத ஆர்வலர்கள் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருந்ததாக சாதிக் அலி, சாகுல் ஹமீது உள்ளிட்ட 6 பேரை கோவை போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். அவர்களிடம்  என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாத பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டதும், அதே பிரசாரத்தை சமூகவலைதளத்தில் அவர்கள் மேற்கொண்டதும் தெரிந்தது.
இலங்கையில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அந்நாட்டின் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜக்ரான் ஹாசிமுடன் 6 பேருக்கும் தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கைப்பற்றப்பட்ட விடியோக்களில், இலங்கை, தமிழகம், கேரளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள், தெற்காசியப் பிராந்தியத்தில் இஸ்லாமிய அரசை ஏற்படுத்த வேண்டும் என்று ஜக்ரான் ஹாசிம் வலியுறுத்தும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. இதேபோல், ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த சிலரின் மின்னஞ்சல் உள்ளிட்ட கணக்குகளை சைபர் கிரைம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதில், இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிட்டிருக்கும் அதிர்ச்சித் தகவலும் தெரிந்தது.
இதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தாக்குதல் சதித் திட்டம் குறித்து இலங்கை உளவுத் துறையினருக்கு இந்திய உளவு அமைப்புகள் முன்கூட்டியே இந்த மாதத் தொடக்கத்தில் எச்சரிக்கை அனுப்பியுள்ளன. இதையும் மீறி, இலங்கையில் தொடர்  குண்டுவெடிப்புகளை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.  இந்த தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கோவை வழக்குத் தொடர்பான  விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் ஏற்கெனவே முடித்து விட்டனர். இந்நிலையில், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து மேற்கண்ட 6 பேருக்கும் தெரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் 6 பேரிடம் இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தலாம் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT