டிடிவி பாணியில் பிரதமர் மோடி பிரசாரம்: திரிணாமூல் காங்கிரஸில் 40 ஸ்லீப்பர்செல்களா?
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் பாணியில் பேசி வருகிறார்.
இந்தியாடிடிவி பாணியில் பிரதமர் மோடி பிரசாரம்: திரிணாமூல் காங்கிரஸில் 40 ஸ்லீப்பர்செல்களா?
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் பாணியில் பேசி வருகிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் பாணியில் பேசி வருகிறார்.
பிரதமர் மோடியின் மேற்குவங்க மாநில தேர்தல் பிரசாரம்தான் இன்றைய முக்கியச் செய்தியாகியுள்ளது.
செராம்போர் பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய மோடி, மே 23ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது மேற்கு வங்க மாநிலம் முழுவதும் தாமரை மலர்ந்திருக்கும். தேர்தல் முடிவுகள் வந்ததும், உங்களுடைய எம்எல்ஏக்களே உங்களை விட்டு விலகி விடுவார்கள். அவ்வளவு ஏன், இப்பொழுதே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தொடர்பில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அவ்வப்போது அதிமுகவில் தங்களது ஸ்லீப்பர்செல்கள் இருக்கிறார்கள் என்று டிடிவி தினகரனும், அமமுகவினரும் கூறி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் 40 பேர் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.