இந்தியா

ம.பி., காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவு வாபஸ்: மாயாவதி மிரட்டல்  

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

IANS

லக்னௌ: மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேசத்தில் ஆட்சி புரியும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளித்து வருகிறது. காங்கிரசுக்கு இங்கு இருப்பது மிக மெல்லிய பெரும்பா ன்மையே ஆகும். 

இந்நிலையில் ம.பி., காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியின் சார்பாக குனா தொகுதிக்கு லோகேந்திர சிங் ராஜ்புத் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அவர் தற்போது மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் இணைந்து விட்டார். இதுதொடர்பாக லோகேந்திர சிங்  தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை சிந்தியா  ட்வீட் செய்திருந்தார்.

இதனால் அதிருப்தியடைந்த மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், 'மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக’ தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலம்பியாவில் இந்திய வாகனங்களை பார்ப்பதில் பெருமை! ராகுல்

மால்வேர் தாக்குதலிலிருந்து தற்காப்பது எப்படி?

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

எச்சரிக்கை! மால்வேர் தாக்குதல்கள் படுமோசம்!

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா நிறைவு: 14 கோயில்களின் தேர்கள் அணிவகுப்பு!

SCROLL FOR NEXT