முகப்பு
இந்தியா

அயோத்தி விவகாரம்: மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் 

சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரத்தில் மூன்று பேர் அடங்கிய மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை வியாழனன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:42 AM
பகிர்:

புது தில்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரத்தில் மூன்று பேர் அடங்கிய மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை வியாழனன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. இந்த குழுவில் ஆன்மிக குருவும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு ஏற்கெனவே கடந்த மே மாதம் தங்கள் இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அளித்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை மத்தியஸ்த குழுவுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மத்தியஸ்த நடவடிக்கை முடித்து இறுதி அறிக்கையை ஆகஸ்ட் 1-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சில நாள்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அயோத்தி நில விவகாரம்  வெள்ளியன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisement

இந்நிலையில் மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை வியாழனன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் சமரசாத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் எதுவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என்பது தெரிய வரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments