370 சட்டப்பிரிவு ரத்து: உச்ச நீதிமன்றத்தை நாடியது தேசிய மாநாட்டுக் கட்சி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது தேசிய மாநாட்டுக் கட்சி.
புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது தேசிய மாநாட்டுக் கட்சி.
அக்கட்சியின் தலைவர்கள் மொஹம்மது அக்பர் லோனே, ஹஸ்னைன் மசூதி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019ஐ, அரசமைப்புச் சட்டமல்ல என்று அறிவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.