இந்தியா

ஒப்பந்த உற்பத்தி துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு பரிசீலனை

DIN

பிற நிறுவனங்களுக்காக ஒப்பந்த முறையில் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
உற்பத்தித் துறையைப் பொருத்தவரை, நேரடியாக பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், அத்தகைய உற்பத்தியாளர்கள் மொத்த விற்பனை சந்தையிலும், மின் வணிகம் உள்ளிட்ட சில்லறை விற்பனை சந்தையிலும் தங்களது பொருள்களை விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.
எனினும், பிற நிறுவனங்களின் தயாரிப்புகளை ஒப்பந்த முறையில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் குறித்து தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் அனைத்தும், இதுபோன்ற ஒப்பந்த உற்பத்தியாளர்களை நாடி வருகின்றன. இந்தச் சூழலில், ஒப்பந்த உற்பத்தித் துறையில் குறித்து பொருளாதாரக் கொள்கையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஒப்பந்த உற்பத்தி நிறுவனங்களுக்கான விதிமுறைகளைத் தெளிவாகக் குறிப்பிடவும், அத்தகைய நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT