இந்தியா

பாஜகவில் இணைந்தார் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட தில்லி எம்எல்ஏவுமான கபில் மிஸ்ரா இன்று பாஜகவில் இணைந்தார்.

DIN

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட தில்லி எம்எல்ஏவுமான கபில் மிஸ்ரா இன்று பாஜகவில் இணைந்தார். 

கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக கூறி, தில்லி சட்டப்பேரவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கபில் மிஸ்ராவை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து கபில் மிஸ்ரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். 

அதில், "தான் பிஜேபியில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்ததாக அறிவிக்காத நிலையில், ஊக தகவல்களின் அடிப்படையிலான பேரவைத் தலைவர் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். பேரவைத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், "நான் பாஜகவில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு சேரப்போகிறேன்' என்று கபில் மிஸ்ரா தனது சுட்டுரையில் நேற்று பதிவிட்டார். 

இந்தத் தகவலை தில்லி பாஜக மூத்த தலைவர்களும் உறுதிப்படுத்தினர்.  பாஜக தேசிய துணைத் தலைவர் ஷியாம் ஜாஜு, தில்லி தலைவர் மனோஜ் திவாரி ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை பிரபலமான ஒருவர் கட்சியில் சேருகிறார் என்று தில்லி பாஜகவும் அறிக்கை வெளியிட்டது. இதன்படி கபில் மிஸ்ரா இன்று பாஜகவைச் சேர்ந்த மனோஜ் திவாரி மற்றும் விஜய் கோயல் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

2017, மே மாதம் தில்லி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும், தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு அதிருப்தி தலைவராக இருந்து வந்தார். அப்போது இருந்தே அவர் பாஜகவில் சேர்ந்துவிடுவார் என தகவல்கள் வெளியாகின.   ஆனால், அவர் கட்சியில் சேராமல், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

SCROLL FOR NEXT