இந்தியா

தனக்கான பாதுகாப்பைக் குறைக்க வலியுறுத்தும் உ.பி ஆளுநர் ஆனந்திபென் படேல்!

ENS

உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் தனக்கு வழங்கப்படும் பாதுகாப்பை குறைக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் 25வது ஆளுநராக ஆனந்தி பென் படேல் கடந்த ஜூலை 29ம் தேதி பதவியேற்றார். இவர், முன்னதாக குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்துள்ளார். அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தொடர்ந்து, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்துள்ளார். 

தற்போது, உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்றுள்ள ஆனந்தி பென் படேல், தனக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை குறைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பாதுகாப்பு வீரர்களில் 50 பேரை திரும்பப் பெறுமாறு அவர் மாநில அரசை வலியுறுத்தியுள்ளார். தனக்கு இவ்வளவு பாதுகாப்பு தேவையில்லை என்றும் பாதுகாப்பு வீரர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

இதேபோன்று அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஏற்கனவே இசட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால், தனக்கு நியமிக்கப்படவிருந்த கூடுதல் பாதுகாப்பு வீரர்களை திரும்பப்பெற வைத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT