இந்தியா

'தாவி' ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை தீரத்துடன் மீட்ட இந்திய விமானப் படை

ஜம்முவில் பாய்ந்து ஓடும் 'தாவி' ஆற்றில் பொதுமக்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

DIN


ஜம்முவில் பாய்ந்து ஓடும் 'தாவி' ஆற்றில் பொதுமக்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

திடீரென வந்த வெள்ளத்தில் இருந்து தப்பிக்க,'தாவி' ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இரண்டு பேர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தாவி குதித்து ஆற்றுக்கு நடுவே இருந்த சுவற்றில் ஏறிக் கொண்டனர்.

தங்களைக் காப்பாற்றுமாறு அவர்கள் கூக்குரலிட்டனர். தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர் வந்தும் பலனில்லை. உடனடியாக இந்திய விமானப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் தெரிவிக்கப்பட்டு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விரைந்து வந்தது. அதில் இருந்து வீரர் ஒருவர் தன்னுயிரை பணயம் வைத்து அந்த சுவரில் இறங்கி, இளைஞர்களை கயிறு மூலம் கட்டி ஹெலிகாப்டர் உதவியோடு மீட்டார்.

இந்த விடியோவை இந்திய விமானப் படை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஊடகங்களிலும் இந்த செய்தி இன்று வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT