இந்தியா

மோடி 22-ஆம் தேதி பிரான்ஸ் பயணம்

DIN


பிரதமர் நரேந்திர மோடி இருநாள்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு வரும் 22ஆம் தேதி செல்லவிருக்கிறார்.
பிரான்ஸுக்கு வரும் 22ஆம் தேதி மாலை செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, அணுசக்தி, கடலோரப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் விருந்தளித்து கௌரவிக்கவுள்ளார். அதன்பின்னர் 23ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் சார்லஸ் பிலிப்பை சந்தித்துப் பேசுகிறார். இதையடுத்து பாரீஸில் யுனெஸ்ரோ தலைமையகத்தில் இந்திய வம்சாவளியினர் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் மோடி உரை நிகழ்த்தவுள்ளார். கடந்த 1950, 1966ஆம் ஆண்டுகளில் நேரிட்ட ஏர் -இந்தியா விமான விபத்துகளில் உயிரிழந்த இந்தியர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவிடத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், அதனைத் தொடர்ந்து, பஹ்ரைனுக்கும் மோடி செல்கிறார். அந்த 2 நாடுகளிலும் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரான்ஸுக்கு அவர் மீண்டும் செல்கிறார். அந்நாட்டின் பயாரிட்ஸ் நகரில் 25ஆம் தேதி நடைபெறும் ஜி-7 அமைப்பின் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT