இந்தியா

மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன்: பிரதமர் மோடி புகழஞ்சலி

DIN

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி (66), உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார். 

அருண் ஜேட்லியின் மறைவு மூலம் மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜேட்லி குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தங்களை பகிர்ந்துகொண்டார்.

அருண் ஜேட்லி இரங்கல் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துகொண்டதாவது,

அருண் ஜேட்லி மிகச் சிறந்த மனிதர், நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர். அவருடைய மறைவின் மூலம் நான் எனது மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன். ஒவ்வொரு விவகாரத்திலும் அவருக்கு இருக்கும் தெளிவு பிரமிக்க வைக்கும். அவருடைய தலைசிறந்த வாழ்வின் மூலம் பல நல்ல தருணங்களை நம்மிடையே விட்டுச் செல்கிறார். நாம் அவரை நிச்சயம் இழக்கிறோம்.

பொது வாழ்வில் எப்போதும் அக்கறை கொண்டவர். நாட்டின் பொருளாதாரத்தையும், ராணுவத்தையும் பலப்படுத்த தேவையான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டவர். மக்களுக்கான எளிமையான திட்டங்களை ஏற்படுத்தியவர். அந்நிய நாடுகளுடனான வர்த்தகத்தை மேம்படுத்தியவர்.

பாஜக-வையும், அருண் ஜேட்லியையும் எப்போதும் பிரிக்க முடியாது. எப்போதும் பாஜக-வின் முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர். இளமைப் பருவத்திலேயே எழுச்சிமிகு மாணவர் தலைவராக உருவெடுத்து, அவசர நிலை பிரகடனத்தின் போது அதை எதிர்த்து போராடி ஜனநாயகத்தை பாதுகாத்தவர்.

பாஜக-வின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் மக்களிடம் எளிய முறையில் எடுத்துச் சென்றவர். பலதரப்பட்ட சமூகங்களிலும் பாஜக-வை கொண்டு சேர்த்தவர் என்று புகழாரம் சூட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT