இந்தியா

ஜம்முவில் மீண்டும் செல்போன் சேவை

ஜம்முவில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை இன்று தொடங்கியுள்ளது. 

DIN

ஜம்முவில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை இன்று தொடங்கியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல்சாசனத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு கடந்த 5ஆம் தேதி நடவடிக்கை எடுத்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதைத்தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலையை தவிர்க்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. இதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பின. இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செல்போன் சேவை இன்று மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 

ஜம்முவுக்கு உட்பட்ட தோடா, கிஷ்துவார், ராம்பான், ராசௌரி, பூஞ்ச் ஆகிய 5 மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை துவக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT