ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் பயணச்சீட்டுக்கு மீண்டும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே (ஐஆர்சிடிசி) சனிக்கிழமை அறிவித்துள்ளது. இந்த சேவைக் கட்டணத்துடன் இணைந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்கப்பட உள்ளது.
ஐஆர்சிடிசியின் இந்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை (செப். 1-ஆம் தேதி) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதனால் ரயில் பயணிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
படுக்கை வசதி கொண்ட ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கு ரூ.15, ஏசி வகுப்புகளில் பயணிக்க, பயணச்சீட்டு முன்பதிவுக்கு ரூ.30 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.20 மற்றும் ரூ.40-ஆக இருந்த சேவைக் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்து, 2016-17 நிதியாண்டில் ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவுக்கான சேவைக் கட்டணம் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.