இந்தியா

4,230 கிலோ மீட்டரை 83 மணி நேரத்தில் கடக்கும் விவேக் எக்ஸ்பிரஸ்!

DIN


திப்ருகர் முதல் கன்னியாகுமரி வரை பயணிக்கும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இந்திய ரயில்வேயில் அதிக தூரம் பயணிக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். பயண நேர அடிப்படையிலும் இதுவே அதிக நேரம் பயணிக்கும் ரயிலாகும். சர்வதேச அளவில் அதிக தூரம் பயணிக்கும் ரயில்களின் வரிசையில் விவேக் எக்ஸ்பிரஸ் 9-வது இடத்தில் உள்ளது.

இந்த ரயில் 4,230 கிலோ மீட்டரை 82 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கிறது. அதாவது, 4 நாள் 10 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும். 9 மாநிலங்களைக் கடந்து பயணிக்கும் இந்த ரயில் 56 ரயில் நிலையங்களை உள்ளடக்குகிறது. இது சனிக்கிழமை இரவு 11.05 மணிக்கு திப்ருகரில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை 9.55 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைகிறது. 

விவேக் எக்ஸ்பிரஸுக்கு அடுத்தபடியாக அதிக தூரம் பயணிக்கும் ரயிலாக ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கிறது. இந்த ரயில் மாதா வைஷ்ணோ தேவி கட்ரா முதல் கன்னியாகுமரி வரை பயணிக்கும் இந்த ரயில் மொத்தம் 3,785 கிலோ மீட்டரை 72 மணி நேரம் 30 நிமிடங்களில் கடக்கிறது. அதாவது 3 நாள் 30 நிமிடங்களாகும். கட்ராவில் இருந்து திங்கள்கிழமை இரவு 9.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் வியாழக்கிழமை இரவு 10.55 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT