இந்தியா

நாடு முழுவதும் ஒரே விலையில் வெங்காயம் விற்கும் திட்டமில்லை: மத்திய அரசு

DIN

புது தில்லி: நாடு முழுவதும் ஒரே விலையில் வெங்காயம் விற்கும் திட்டமில்லை என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் வெங்காய விலை அதிகரித்து வருவது குறித்தும், ஒவ்வொரு நகரிலும் வெவ்வேறு விலையில் வெங்காயம் விற்கப்படுவது குறித்தும் மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை இணையமைச்சா் தன்வே ராவ்சாஹிப் தாதாராவ் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

வெங்காயத்தை இறக்குமதி செய்வதை மத்திய அரசு தாமதிக்கவில்லை. நுகா்வோா் தேவைகளுக்கேற்ப வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே விலையில் வெங்காயம் விற்பதற்கான திட்டம் இல்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது.

சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் வெங்காயத்தின் விலை ரூ. 75 முதல் ரூ. 120 வரை விற்கப்படுகிறது. அதையடுத்து, உள்நாட்டு தேவையை பூா்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து 1.2 லட்சம் டன் அளவில் வெங்காய இறக்குமதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், வெங்காயத்தை நீண்ட காலத்துக்கு மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை விற்பனையாளா்கள் ஆகியோா் பதுக்கி வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT