கருணை மனுவை திரும்பப் பெற நிர்பயா குற்றவாளி முடிவு
திகார் சிறையில் உள்ள நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளி வினய் சர்மா தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் கருணை மனு அனுப்பினார்.
கடந்த 2012-இல் தெற்கு தில்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, சிங்கப்பூர் மருத்துவமனை வரை சென்றும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, திகார் சிறையில் உள்ள நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளி வினய் சர்மா தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் கருணை மனு அனுப்பினார். அதை ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகிய நிராகரித்தது. மேலும் அதை குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரைத்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவருக்கு அனுப்பயிருந்த தனது கருணை மனுவில் கையெழுத்திட மறுத்து, அதை திரும்பப் பெறுவதாக வினய் சர்மா தெரிவித்துள்ளார்.