Citizenship Bill 
இந்தியா

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட மாநிலங்களில் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் உட்பட வட மாநிலங்களில் நடந்த போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

DIN


குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் உட்பட வட மாநிலங்களில் நடந்த போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அஸ்ஸாமில் வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு அழைப்பு விடுத்திருந்த 11 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அஸ்ஸாம் மட்டுமல்லாமல் வடஇந்திய மாநிலங்களில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில்  போராட்டம் வெடித்துள்ளது.

பல இடங்களில் ஆா்ப்பாட்டக்காரா்கள் வாகனங்களை அடித்து உடைத்தும், டயா்களை சாலையில் போட்டு எரித்தும் வாகனப் போக்குவரத்தைத் தடுத்தனா். இதனால் சில இடங்களில் போக்குவரத்து காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

11 மணி நேர முழு அடைப்புக் காரணமாக அஸ்ஸாமில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  பல இடங்களில் போராட்டக்காரர்கள் ரயில் மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டதால், பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

திப்ருகாரில் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டம் காரணமாக பல்வேறு பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அறிமுகம் செய்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், நாளை இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT