இந்தியா

பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள்!

DIN


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தேடுதல் இணையதளமான கூகுளில் இந்திய விமானப்படை வீரர், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன், இந்திய பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஆகியோர் மிகவும் விரும்பி தேடப்படும் பிரபலங்கள் என தெரியவந்துள்ளது. 

பாகிஸ்தானில் 2019 ஆம் ஆண்டில் தேடுதல் இணையதளமான கூகுளில் மிகவும் தேடப்பட்ட பிரபலங்கள், மற்றும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் கூகுளில் அதிகமாக வைரலாகும் சம்பவங்கள் குறித்த ஆய்வு வெளியாகியுள்ளது. அதில் மிகவும் விரும்பி தேடப்படும் முதல் 10 பிரபலங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது.

அந்த முதல் 10 பிரபலங்களில் மிக்-21 பைசன் ரக போா் விமானத்தை சண்டையின்போது தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குச் சென்று மீண்டும் தாய்நாடு திரும்பிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாலிவுட் நடிகை சாரா அலிகான்  மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் பாடகர் அட்னான் சமி மிகவும் விரும்பி தேடப்படும் பிரபரலங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதேபோன்று பாகிஸ்தான் திரைப்பட நடிகை நைமல் கஹாவர் கான்,  பிக்பாஸ் 13- ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் அனிமேஷன் தொலைக்காட்சி தொடரான மோட்டூ-பட்டுலு ஆகியவை மிகவும் விரும்பி தேடப்படும் பிரபலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 

2019 ஆம் ஆண்டில் தேடுதல் இணையதளமான கூகுளில் மிகவும் தேடப்பட்ட  பட்டியலில், தொலைக்காட்சித் தொடரான ​​பிக் பாஸ்-சீசன் 13 இரண்டாவது பிரபலமான தேடலாக உள்ளது. பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான் ஆறாவது இடத்தையும், அபிநந்தன் வர்தமன் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியான மோட்டு பட்லு, எட்டாவது இடத்தையும், பாலிவுட் படங்களான கபீர் சிங் மற்றும் கல்லி பாய் ஐந்தாவது மற்றும் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT