இந்தியா

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்: மாயாவதி

DIN

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குடியரிமைச் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். இல்லையெனில் அது எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். முன்பு காங்கிரஸ் செய்ததைப் போல தற்போது பாஜகவும் அவசரநிலையை உருவாக்கக்கூடாது.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்றக் குழு நேரம் கோரியுள்ளது. மேலும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகவும் பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT