போராட்டம் காரணமாக தில்லியில் போக்குவரத்து மாற்றம்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருவதால், தில்லியில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருவதால், தில்லியில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் தில்லியிலும் கடந்த இரு தினங்களாக போராட்டம் நடந்து வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு சில சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மதுரா - கலிந்தி குன்ஜ் இடையிலான சாலை எண் 13 மூடப்பட்டுள்ளது. இதனால், நொய்டாவிலிருந்து வரும் மக்கள் டி.என்.டி அல்லது அக்ஷர்தம் சாலை வழியாக தில்லியை சென்றடைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மதுரா சாலையில் இருந்து நொய்டாவுக்குச் செல்லும் மக்கள் அக்ஷர்தம் சவுக் அல்லது டி.என்.டி அல்லது நொய்டா இணைப்பு சாலையில் செல்லலாம். கலிந்தி குன்ஜ் பகுதிக்குச் செல்லும் ஒக்லா இணைப்புச்சாலையும் மூடப்பட்டுள்ளது.
மேலும், சோன்ஹா ஹில்ஸ் பகுதியில் வாகனங்கள் ஸ்தம்பித்துள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் வழக்கம்போல இயங்குகின்றன.