எல்லா ஊரிலும் இப்படித்தான் போல: லஞ்சம் வாங்கிய எஸ்ஐ கைது
சொத்துத் தகராறில் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் பெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
புவனேஸ்வர்: சொத்துத் தகராறில் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் பெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
கட்டாக் வாகனப் போக்குவரத்து காவல்துறையில் ரூ.94.67 லட்சம் மதிப்பிலான சொத்து தொடர்பான வழக்கில், ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் வாங்கிய காவல்துறை துணை ஆய்வாளர் ஜன்மஜெய் மாலிக்கை லஞ்சம் ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.
அதே சமயம், கட்டக்கில் உள்ள அவரது அரசு குடியிருப்பிலும், பிடானாசி பகுதியில் உள்ள மூன்று மாடி குடியிருப்பிலும், கேந்த்ராபாரா மாவட்டத்தின் அந்தாரா கிராமத்தில் உள்ள வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் டிசம்பர் 12ம் தேதி ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
Advertisement
இந்த நிலையில் அவர் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரை 2020ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.