இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது ஏன்? சரத் பவார் கேள்வி

இந்தியாவில் குடியேறியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் குடியுரிமை மறுக்கப்படுவது ஏன் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN


இந்தியாவில் குடியேறியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் குடியுரிமை மறுக்கப்படுவது ஏன் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்த வந்த மக்களுக்கு குடியுரிமை வழங்க அனுமதி அளிக்கப்படும் நிலையில், இலங்கையில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நாட்டில் தற்போது நிலவும் மிக முக்கியப் பிரச்னைகளில் இருந்து மக்களை திசைத் திருப்பவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி போன்ற விஷயங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்துவதாகவும் சரத் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூருவில் தொழிலதிபர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வேதாரண்யம் : தந்தை அடித்துக் கொலை; மகன் கைது

இளையராஜாவிடம் விருது பெற்ற பாக்யஸ்ரீ போர்ஸ்!

பட்ஜெட்: சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

திமுக அரசு ஒரேயொரு குடும்பத்துக்கானது மட்டுமே: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT