உதவிப் பேராசிரியரானார் போராட்டத்தில் காயமுற்ற மாணவர்
கடந்த டிசம்பர் 15ம் தேதி தில்லி அலிகார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த மாணவர் உதவி பேராசியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 15ம் தேதி தில்லி அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த மாணவர் உதவி பேராசியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முன்னதாக, கடந்த டிசம்பர் 15ம் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பிஹெச்.டி மாணவர் தாரிக் என்பவரும் பங்கேற்றார். இவர் இளநிலை ஆராய்ச்சியாளர்(ஜே.ஆர்.எஃப்) மற்றும் நெட் தேர்வில் தகுதி பெற்றவர்.
இந்நிலையில், போராட்டத்தில் போலீசாருடன் ஏற்பட்ட மோதல்களின்போது தாரிக் பலத்த காயமடைந்தார். அவரது வலது கை விரல்கள் பலத்த சேதமடைந்துள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு, தொற்றுநோய் பரவாமல் காப்பாற்ற அவரது உள்ளங்கையை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரை உதவி பேராசிரியராக நியமித்து அலிகர் பல்கலைக்கழகம் இன்று உத்தரவிட்டுள்ளது. அறிவியல் மற்றும் வேதியியல் துறையின் தலைவர் ஆகியோருடன் கலந்தாலோசித்து அவசர முடிவாக இது எடுக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
Advertisement
அலிகர் பல்கலை.யில் கடந்த 15ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று அது வன்முறையில் முடிந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள பல்கலை சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி வி.கே.குப்தா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் மூன்று மாத காலத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று பல்கலை. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி வி.கே.குப்தா இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்