முகப்பு
இந்தியா

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் டிச.27ல் பதவியேற்பு?

ஜேஎம்எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் வருகிற டிசம்பர் 27ம் தேதி முதல்வராக பதவியேற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:39 PM
பகிர்:

ஜேஎம்எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் வருகிற டிசம்பர் 27ம் தேதி ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஜேஎம்எம் செயல் தலைவா் ஹேமந்த் சோரன் அம்மாநில முதல்வராக பதவியேற்க இருக்கிறாா்.

81 தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 41 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் ஜேஎம்எம் 30 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16 இடங்களிலும், ஆா்ஜேடி 1 இடத்திலும் வென்றுள்ளன.

ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கு 25 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. ஜேஎம்எம்-இன் ஆலோசனைக் கூட்டத்திற்கு சட்டமன்ற வெற்றி வேட்பாளர்கள்  அழைக்கப்பட்டுள்ளனர். ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஷிபு சோரனின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஹேமந்த் சோரன் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதுபோன்று   ஜேஎம்எம் -காங்கிரஸ் -ஆர்ஜேடி கூட்டணி கட்சிகளும் கூடி ஆலோசிக்கவுள்ளன. 

ஜேஎம்எம் கூட்டத்திற்குப் பிறகு ஹேமந்த் சோரன் ஜார்க்கண்டில் அரசமைக்க ஆளுநரைச் சந்தித்து உரிமை கோருவார் என்று கூறப்படுகிறது. அதேபோன்று வருகிற டிசம்பர் 27ம் தேதி அவர் முதல்வராக பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது. 

பதவியேற்பு விழாவிற்கு பாஜக ஆட்சி செய்யாத அல்லாத பிற மாநில முதல்வர்களும் அழைக்கப்படுவார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →