முகப்பு
இந்தியா

காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்களுக்கு நன்றி: ராகுல்

காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் நன்றி தெரிவித்தார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:39 PM
பகிர்:

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக தலைநகர் தில்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் நன்றி தெரிவித்தார்.

இதுதொடர்பாக ராகுல் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டதாவது,

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்தியாவைப் பிளவுபடுத்த திட்டமிட்டு நடத்திய முயற்சி தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி தலைநகர் தில்லியில் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →