முகப்பு
இந்தியா

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் சைக்கிள் பேரணி

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

Updated On : 31 டிசம்பர், 2019 at 12:48 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 7:14 PM

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி தொடங்கி சட்டப்பேரவை வரை பேரணி நடைபெற்றது. மேலும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களிட்டு அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.