10 ரூபாய் நாணய மறுப்பு: நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி அறிவிப்பு
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சமீப காலமாக பல இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் இனி செல்லுபடியாகாது என்ற வதந்தி பரவியதைத் தொடர்ந்து பலர் நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என்றும் இதனை வாங்க மறுப்பது குற்றம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புழக்கத்தில் இருக்கும் அனைத்து 10 நாணயங்களும் செல்லும் என்று கூறிய ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்பில் 'ரிசர்வ் வங்கி அறிவிப்பின்றி ஒரு நாணயத்தை செல்லாததாகவோ, வாங்க மறுப்பதோ குற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி 1906-ம் வருடத்திய நாணயச் சட்டத்தின்படி, இந்தப் பத்து ரூபாய் நாணயம் செல்லத்தக்கது என்றும், இந்த நாணயத்தை முடக்குவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறப்பட்டுள்ளது.
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 ஏ-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.