இந்தியா

கொல்கத்தா ஆணையர் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றது ஏன்? மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் பேச்சு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், காவல் ஆணையர் வீட்டுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகளை போலீஸ் தடுத்து நிறுத்திய சம்பவம் குறித்து மாநிலங்களவையில் ராஜ்நாத் விளக்கம் அளித்தார்.

DIN


புது தில்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், காவல் ஆணையர் வீட்டுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகளை போலீஸ் தடுத்து நிறுத்திய சம்பவம் குறித்து மாநிலங்களவையில் ராஜ்நாத் விளக்கம் அளித்தார்.

மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் பேசி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் கூறியதாவது, விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால்தான் கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் செல்ல நேரிட்டது.

சாரதா சிட்பண்ட் நிதி மோசடி வழக்கில் சிபிஐ நடவடிக்கையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்தியுள்ளார். கொல்கத்தாவில் இதுவரை இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது.

கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரிகள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டனரா என்று விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே வியத்நாம்... டோனல் பிஷ்ட்!

கொடூரமான சண்டைக் காட்சிகள்... வைரலாகும் துரந்தர் பட டிரைலர்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.88.61ஆக நிறைவு!

நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ. 309 கோடி எங்கே? - அண்ணாமலை கேள்வி

நீல நிற மயில்... அஞ்சு குரியன்

SCROLL FOR NEXT