இந்தியா

குஜ்ஜார் உட்பட 5 பிரிவினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு: ராஜஸ்தான் அரசு

DIN


குஜ்ஜார் உட்பட 5 பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கும் வகையில் ராஜஸ்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சட்டத் திருத்த மசோதாவை ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார், ரைகா-ரேபரி, கடியா லூஹார், பஞ்சாரா, கடாரியா ஆகிய பிரிவினர் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 5 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், குஜ்ஜார் மற்றும் மற்ற 4 பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் ராஜஸ்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சட்டத் திருத்த மசோதாவை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதாவை அம்மாநில சட்டப்பேரவையில் அமைச்சர் பிடி கல்லா தாக்கல் செய்தார். 

இந்த சட்டத்திருத்த மசோதா பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 21 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயர்த்தவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT