இந்தியா

சுஷீல் சந்திரா தேர்தல் ஆணையராக நியமனம்

DIN


மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவராக இருந்த சுஷீல் சந்திரா, தற்போது தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அவரது நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக, மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவர் பதவியை அவர் ராஜிநாமா செய்ய வேண்டும். சுஷீல் சந்திராவின் பதவியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பயின்றவரான சுஷீல் சந்திரா, கடந்த 1980-ஆம் ஆண்டு பிரிவில் இந்திய வருவாய் துறை அதிகாரியாக  தேர்வு செய்யப்பட்டவர்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது சுனில் அரோரா, தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ளார். ஏற்கெனவே தேர்தல் ஆணையராக உள்ள அசோக் லாவாஸாவுடன் தற்போது நியமிக்கப்பட்டுள்ள சுஷீல் சந்திரா- என இரண்டு தேர்தல் ஆணையர்கள் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT