இந்தியா

பாகிஸ்தான் மீது நடவடிக்கை: சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

DIN


காஷ்மீர்பயங்கரவாதத் தாக்குதல்சம்பவத்துக்கு பதிலடியாகபாகிஸ்தான் மீது நடவடிக்கைஎடுக்கவேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பாகிஸ்தான் ஒரு நாடு அல்ல. அந்நாட்டில் பலுசிஸ்தான், சிந்து, பக்துனிஸ்தான், மேற்கு பஞ்சாப் என நான்கு மாகாணங்கள்உள்ளன. இவற்றை நான்கு நாடுகளாக பிரித்தால்தான் பாகிஸ்தானிடமிருந்து இந்தியாவுக்கு அமைதி கிடைக்கும். பயங்கரவாத பிரச்னை இருக்காது. பாகிஸ்தானை நான்காக பிரிப்பதற்கு அமெரிக்காவும், சீனாவும் ஒப்புக்கொள்ள வேண்டும். காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதல் உளவுத் துறையின் தோல்வியாகும்.
இந்த தாக்குதல் குறித்து உளவுத் துறை ஏற்கெனவே தகவல் அளித்துள்ளது. இது போன்ற தகவல்களை தினமும் உளவுத்துறை அளிப்பதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என நினைக்கிறேன். இத்தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருப்பது காரணமல்ல. இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வர்த்தக கூட்டு நாடு பாகிஸ்தான் எனும் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தேன். வெள்ளிக்கிழமைதான் அந்த அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 
பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் சிந்து நதியின் நீரின் அளவை குறைக்க வேண்டும். கர்த்தார்பூர் சாலைத் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். பாகிஸ்தானுடன் எவ்வித உறவையும் வைத்துக் கொள்ளக்கூடாது. 
இதுவரை நடந்த 4 போரும் பாகிஸ்தான் தொடங்கியதாகும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT