இந்தியா

ஜெய்ஷ் இயக்க பயங்கரவாதிகள் இருவர் கைது

DIN


உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாணவர் என்ற போர்வையில் இருந்து கொண்டு, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாநில காவல்துறைத் தலைவர் ஓ.பி.சிங் இத்தகவல்களை வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், சஹாரண்பூரில் கடந்த வியாழக்கிழமை இரவில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதலாம் நபரான ஷா நவாஸ் அகமது அலி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் பகுதியைச் சேர்ந்தவர்; இரண்டாம் நபரான ஆகிப் அகமது மாலிக், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்தவர் ஆவார்.
இருவரும் 20-25 வயதுக்கு உள்பட்டவர்கள் என்றும், தேவ்பந்த் பகுதியில் மாணவர்கள் எனக் கூறி தங்கியிருந்த அவர்கள், பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் ஏ.பி.சிங் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
இந்த இருவர் குறித்து கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறை சார்பில் விசாரணையைத் தொடங்கினோம். 
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரிடம் இருந்தும், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
ஜிஹாதி கொள்கை அடிப்படையிலான கருத்துப் பரிமாற்றங்கள், விடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.
புல்வாமா தாக்குதலில் தொடர்பா?:  கைது செய்யப்பட்ட இருவருக்கும், அண்மையில் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு இருக்குமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்: புல்வாமா தாக்குதலுக்கு முன்பு இங்கு வந்தார்களா அல்லது அதற்கு பின்னர் வந்தார்களா என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம்.
அவர்களுடன் எத்தனை பேர் ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்? யாரேனும் ஜெய்ஷ் இயக்கத்தில் இணைந்தார்களா? எங்கிருந்து அவர்களுக்கு நிதி வருகிறது? ஆள் சேர்ப்புக்கு பிறகு நிகழ்த்துவதற்கு திட்டமிடப்பட்ட சதி என்ன என்பதும் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த கைது நடவடிக்கைக்கு ஜம்மு-காஷ்மீர் காவல்துறை முழுமையான ஒத்துழைப்பை அளித்தது. இந்த விவகாரத்தில் இனி வரும் காலங்களிலும் இரு மாநில காவல்துறையினருக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடரும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT