இந்தியா

எல்லையில் போர் பதற்றம்: போர் விமானங்கள் - வீர்ர்கள் குவிப்பு

சர்ஜிக்கல் தாக்குதல் முறையில் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் போர்

DIN

சர்ஜிக்கல் தாக்குதல் முறையில் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் வெடிகுண்டுகளை வீசி முற்றிலுமாக தகர்த்துள்ளது. இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லைப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் உயர் கண்காணிப்பு, ரேடார் மேற்பார்வை என ராணுவம் உஷார் நிலையில் இருந்தும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து எல்லைப்பகுதியில் போர் பதற்றம் உருவாகி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

அதிகாலை 3.30 மணிக்கு 12 விமானங்களோடு பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப்படை சரமாரி தாக்குதல்களை நடத்தி  4 ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லை பகுதிகளில் தயார் நிலையில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்திய விமானப்படை முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. விமானங்கள் எல்லையில் குவிக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீர் மட்டுமின்றி அனைத்து எல்லையிலும் உஷார் நிலை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகிறது. 

இதனிடையே இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலை குறித்து விவாதிக்க பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் குரேஷி இஸ்லாமாபாத்தில் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும்: தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபு சோரன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் நேரில் அஞ்சலி

தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மன வேதனை காங்கிரஸ் எம்பிக்கு புரிந்திருக்கும்: அதிமுக எம்பி இன்பதுரை

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல்: அரசியல் கட்சிகளிடமிருந்து இதுவரை புகாா் வரவில்லை- தோ்தல் ஆணையம்

நாடாளுமன்றத் தெருவில் காா் - பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT