இந்தியா

மணிப்பூருக்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை: முதல்வர் வேண்டுகோள் 

மணிப்பூருக்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக மாநில முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.

UNI

இம்பால்: மணிப்பூருக்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக மாநில முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.

புதனன்று மணிப்பூர் மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் ரஞ்சித் சிங், மணிப்பூர் மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறியுள்ளவர்கள் குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து மாநில முதல்வர் பைரேன் சிங் கூறியதாவது:

மணிப்பூர் மாநில குடிமக்களை தனித்து அடையாளம் காணவும், சட்ட விரோத குடியேறிகளை கட்டுப்படுத்தவும், மணிப்பூருக்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளளோம்.

கடந்த 2011 முதல் 2018 வரை மணிப்பூரில் சட்ட விரோதமாக குடியேறிய 79 ரோஹிங்ய அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 52 பேர் தங்களது சிறை தண்டனைகயை முடிதத பின்பு, மியான்மருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 27 பேர் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேரவையில் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT