இந்தியா

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது: இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து காஷ்மீர் துண்டிப்பு

கடும் பனிப்பொழிவு காரணமாக இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து காஷ்மீர் மாநிலம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ANI


ஸ்ரீநகர்: கடும் பனிப்பொழிவு காரணமாக இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து காஷ்மீர் மாநிலம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பெரும் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவாக இதுவே கருதப்படுகிறது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, ஸ்ரீநகரில் 10 இன்ச் அளவுக்கு பனித்துகள் நிரம்பியிருந்தது. கடும் பனிப்பொழிவால் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வானிலையில் மாற்றம் ஏற்பட்டால்தான் விமானப் போக்குவரத்துத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் நேற்று இரவு மைனஸ் 3.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

SCROLL FOR NEXT