இந்தியா

மேகாலய சுரங்க மீட்புப் பணியில் மேலும் சிக்கல்

தினமணி

மேகாலயத்தில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க கடந்த 25 நாள்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சுரங்கத்திலிருந்து நீரை வெளியேற்றும் அதிதிறன் வாய்ந்த 3 மோட்டார் பம்புகள் ஞாயிற்றுக்கிழமை பழுதடைந்தன. இதனால், மீட்பு பணியில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 மேகாலயத்தின் கிழக்கு ஜைந்தியா மாவட்டம், லும்தாரி கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த அந்த சுரங்கத்தில் அண்மையில் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதில், 15 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்காக, இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மேலாண்மை படை ஆகியவற்றின் நீச்சல் வீரர்கள் கடந்த 25 நாள்களாக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 இந்நிலையில், சுரங்கத்திலிருந்து நீரை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த அதிதிறன் வாய்ந்த 3 மோட்டார் பம்புகள் ஞாயிற்றுக்கிழமை பழுதடைந்தன. இதையடுத்து, புதிதாக ஒரு மோட்டார் பம்பு கொண்டுவரப்பட்டது.
 மேலும் பழுதடைந்த பம்புகளை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 370 அடி ஆழமுள்ள அந்த சுரங்கத்தில் தற்போது 160 அடி வரை தண்ணீர் நிற்பதாக மீட்புப் பணி மேற்பார்வை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT