இந்தியா

சபரிமலைக்கு சென்ற 2 பெண்கள் தடுத்துநிறுத்தம்

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் தீர்ப்பு அளித்தது. இதற்கு பக்தர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 

இதன்காரணமாக ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள அரசு செய்து வருகிறது. 

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். நீலமலையில் பக்தர்கள் எதிர்ப்பால் கண்ணூரை சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா போலீஸ் பாதுகாப்புடன் பம்பை திரும்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT