ஒரேயொரு குடும்பம்தான் காங்கிரஸுக்கு கட்சி - மோடி
பிரியங்காவுக்கு காங்கிரஸில் பதவி அளிக்கப்பட்டிருப்பது, ஒரேயொரு குடும்பம்தான், காங்கிரஸுக்கு கட்சியாக உள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர
பிரியங்காவுக்கு காங்கிரஸில் பதவி அளிக்கப்பட்டிருப்பது, ஒரேயொரு குடும்பம்தான், காங்கிரஸுக்கு கட்சியாக உள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் பாராமதி, கட்சிரோலி உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் மோடி காணொலி வாயிலாக புதன்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: பல இடங்களில் குடும்பமே கட்சியாக உள்ளது; அவ்வாறில்லாமல், பாஜக ஒரு குடும்பமாக உள்ளது. பாஜகவில் தனிப்பட்ட ஒரு நபர் அல்லது குடும்பத்தினர் விருப்பப்படி முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. கட்சித் தொண்டர்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.
பாஜக, ஜனநாயகக் கொள்கைகளால் இயங்கி வருகிறது. கட்சியின் அனைத்து நிலைகளிலும் ஜனநாயகம் தழைத்தோங்குகிறது. ஆகவேதான், தங்களுக்கு நெருக்கமான கட்சியாக பாஜகவை மக்கள் உணர்கிறார்கள் என்றார் மோடி.