இந்தியா

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியக் கைதிகளின் பட்டியலை அளித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 261 இந்தியக் கைதிகளின் பட்டியலை அந்நாட்டு அரசு இந்திய தூதரகத்திடம் அளித்துள்ளது.

PTI


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 261 இந்தியக் கைதிகளின் பட்டியலை அந்நாட்டு அரசு இந்திய தூதரகத்திடம் அளித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் இன்று இந்திய தூதரகத்திடம், பாகிஸ்தான் அரசு அளித்த சிறைக் கைதிகளின் பட்டியலில் 52 பொதுமக்கள், 209 மீனவர்கள் என 261 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதே சமயம், இந்தியச் சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளின் பட்டியலையும், புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்தியா அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆண்டுக்கு இரண்டு முறை, தங்கள் கைவசம் உள்ள கைதிகளின் தகவல்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்வது என்ற ஒப்பந்தத்தின் படி இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பிற்கினியாள் ✨🌸... ரஷ்மிகா!

மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

SCROLL FOR NEXT