முகப்பு
இந்தியா

வங்கி மோசடி வழக்குகள்: அதிரடியாகக் களத்தில் இறங்கியது சிபிஐ; 12 மாநிலங்களில் சோதனை

நாடு முழுவதும் பல்வேறு வங்கிகள் தரப்பில் பதிவு செய்யப்பட்ட வங்கி மோசடி வழக்கில் அதிரடியாகக் களமிறங்கியிருக்கும் சிபிஐ நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:24 AM
பகிர்:


புது தில்லி: நாடு முழுவதும் பல்வேறு வங்கிகள் தரப்பில் பதிவு செய்யப்பட்ட வங்கி மோசடி வழக்கில் அதிரடியாகக் களமிறங்கியிருக்கும் சிபிஐ நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

சிறப்பு நடவடிக்கை என்ற பெயரில் நடத்தப்படும் இன்றைய அதிரடி சோதனை 12 மாநிலங்களில் 50 இடங்களில் நடந்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக 640 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்கள், அதன் முதலாளிகளின் வீடுகள் என சோதனைக்கு பல இடங்கள் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையானது தில்லி, மும்பை, லூதியானா, தானே, வல்தாட், புனே, கயா, குருக்ராம், சண்டிகர், போபால், சூரத் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.