இந்தியா

தன்னைத் தோற்கடித்தவர்களை நாளை நேருக்கு நேர் சந்திக்கவிருக்கிறார் ராகுல்

PTI


அமேதி: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் நாளை அமேதி தொகுதிக்குச் செல்லவிருக்கிறார்.

அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், அங்கு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியைத் தழுவினார்.

மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, நாளை முதல் முறையாக அமேதி செல்லவிருக்கிறார் ராகுல் காந்தி.

இந்த பயணத்தின் போது, கட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடிக்கான காங்கிரஸ் பிரதிநிதிகள் உள்ளிட்டோரையும் ராகுல் காந்தி சந்திக்கவிருப்பதாகவும், தனது தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய ராகுல் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம், அமேதியில் உள்ள சில கிராமங்களுக்கும் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

1999ம் ஆண்டு முதல் அமேதியில் போட்டியிட்டு வரும் ராகுல் காந்தியை, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ஸ்மிருதி இரானி 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓஹோ.. எந்தன் பேபி!

இலங்கை பிரீமியர் லீக்கில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்!

இன்னமும் அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது: ம.பி. உயர் நீதிமன்றம்

அழகிய மோகினி! நபா நடேஷ்..

5 கட்டத் தேர்தல்களில் 310 இடங்களில் வெற்றி உறுதி - அமித் ஷா

SCROLL FOR NEXT