இந்தியா

மத ரீதியான கோஷங்களை எழுப்ப நிர்ப்பந்திப்பவர்கள் மீது நடவடிக்கை: மாயாவதி வலியுறுத்தல்

DIN


மத ரீதியான கோஷங்களை எழுப்புமாறு, பொதுமக்களை நிர்ப்பந்திப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மத ரீதியான கோஷங்களை எழுப்புமாறு, பொதுமக்களை நிர்ப்பந்திப்பது, அவ்வாறு கோஷமிட மறுப்பவர்களை தாக்குவது போன்ற தவறான வழக்கங்கள், உத்தரப் பிரதேசம் உள்பட சில மாநிலங்களில் தொடங்கியுள்ளன. அவை கண்டனத்துக்குரியவை. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக மத்திய அரசும், மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்போதுதான், சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் பராமரிக்க முடியும் என்று தனது பதிவில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்பூரில் இஸ்லாமிய மார்க்க அறிஞரான இம்லக்-உர்-ரஹ்மான் என்பவரை, ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடக் கூறி சிலர் வற்புறுத்தியதாகவும், அவரை தாக்கியதாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் 12 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அண்மையில் முஸ்லிம் இளைஞர் ஒருவர், இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக, மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டார். அவரைத் தாக்கிய கும்பல்,  ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என்று கோஷமிடும்படி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இறுதியில் அந்த இளைஞர் படுகாயமடைந்து உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT