முகப்பு
இந்தியா

கால்நடைகளைத் திருட  முயன்றதாக சந்தேகம்: மூவர் அடித்துக் கொலை 

பிகாரில் கால்நடைகளைத் திருட  முயன்றதாக எழுந்த சந்தேகத்தின் காரணமாக மூவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 19 ஜூலை, 2019 at 7:46 PM
பகிர்:

பாட்னா: பிகாரில் கால்நடைகளைத் திருட  முயன்றதாக எழுந்த சந்தேகத்தின் காரணமாக மூவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பிகாரில் சரண் மாவட்டம் பனியாபூர் காவல் நிலைய எல்லையில் கீழ் உள்ளது பைகம்பர்பூர் கிராமம். இங்கே வெள்ளிக்கிழமை காலை மூன்று பேரை ஒரு கும்பல் சேர்ந்து தாக்கி கொன்றது. அவர்கள் கால்நடைகளை திருட முயற்சி செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.