இந்தியா

காவல் நிலையத்தில் டிக் டாக்: குஜராத்தில் பெண் காவலர் பணியிடை நீக்கம்

DIN

குஜராத்தில் காவல்நிலையத்தில் நடனமாடி டிக் டாக்கில் பதிவிட்ட பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் மெஹ்சானா கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் அர்பிதா சவுத்ரி. டிக் டாக் செய்வதில் அதிகம் ஆர்வம் கொண்டவரான இவர் காவல் நிலையத்தில் இந்தி பாடல் ஒன்றுக்கு சாதாரண உடையில் நடனமாடி டிக் டாக் செயலியில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

பெண் காவலரின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு பலத் தரப்பிலிருந்து கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து காவல்நிலையத்தில் டிக் டாக் பதிவு செய்த பெண் காவலர் சவுத்ரியை பணியிடை நீக்கம் செய்து துணை காவல்துறை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவிட்டார். மேலும் அவர் மீது துறை நீதியான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சவுத்ரியிடம் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT