இந்தியா

மேன் Vs வைல்ட் புகழ் பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

பிரபல தனியார் தொலைக்காட்சியான டிஸ்கவரியில் ஒளிபரப்பப்படும் மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. 

DIN

பிரபல தனியார் தொலைக்காட்சியான டிஸ்கவரியில் ஒளிபரப்பப்படும் மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார். இயற்கையை பாதுகாப்பது, சூழலியல் மாற்றங்கள், வனப்பகுதிகளில், மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் இருப்பதைக் கொண்டு நாம் எவ்வாறு உயிர் வாழ வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் சாராம்சமாகும்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ஜிம் கார்பட் தேசியப் பூங்காவில் இப்படப்படிப்பு நடத்தப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு 9 மணியளவில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என நாட்டின் 12 மொழிகளுடன் 180 நாடுகளில் ஒரே நேரத்தில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில்,

எனது வாழ்வில் பல ஆண்டுகளாக மலை, காடு போன்ற இடங்களில் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்துள்ளேன். எனது வாழ்வின் மிகப்பெரிய தாக்கத்தை இந்த அனுபவம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பொது வாழ்வுக்கு அப்பாற்பட்டு இயற்கையுடன் இணைந்து மிக சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. எனவே இதில் முழு அர்ப்பணிப்புடனும், உற்சாகத்துடனும் கலந்துகொண்டேன்.

நாட்டின் வளமிக்க இயற்கையை பறைசாற்ற எனக்கு இந்த நிகழ்ச்சி நல்வாய்ப்பாக அமைந்தது. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்த சிறந்த வாய்ப்பாக அமைந்தது. வனப்பகுதிகளில் மீண்டும் நேரம் செலவிட்டது சிறந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது. பியர் க்றில்ஸ் உற்சாகமானவராகவும், இயற்கையை நேசிப்பவராகவும் உள்ளார் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி குறித்து பியர் கிரில்ஸ் கூறுகையில்,

நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையே இயற்கை உணர்த்துகிறது. உலகின் தலைசிறந்த தலைவருடன் நேரம் செலவிட்டது எனக்கு கிடைத்த கௌரவமாகும். இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி குறித்து நிறைய தெரிந்துகொண்டேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

வால்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தினகரன்

பழைய இரும்பு கடையில் தீ விபத்து

பூம்புகாா் வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

SCROLL FOR NEXT