இந்தியா

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் மூவருக்கு 10 நாள் என்.ஐ.ஏ காவல் 

DIN

புது தில்லி: பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த விவகாரம் தொடர்பாக  காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் மூவருக்கு 10 நாள் தேசிய விசாரணை ஆணைய (என்.ஐ.ஏ) காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுக்க 2017-ம் ஆண்டு அதிரடி நடவடிக்கையை தேசிய புலனாய்வு பிரிவு மேற்கொண்டது. அமலாக்கப்பிரிவும் இந்த விசாரணையை சேர்ந்து நடத்தியது. இது தொடர்பாக பலர் கைதும் செய்யப்பட்டனர்.

அவர்களில் காஷ்மீர் பிரிவினைவாதிகள் மசாரத் அலாம், ஷாபீர் ஷா மற்றும் ஆசியா அண்டரபி ஆகியோரும் அடங்குவர். இவர்கள் மூவரும் செவ்வாயன்று தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதையடுத்து இவர்கள் மூவரையும் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஆணையத்திற்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு இவர்கள் நிதி திரட்டும்  என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT