இந்தியா

இஃப்தார் விருந்தும், என்டிஏ தலைவர்களும்: கிரிராஜ் சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு அமித் ஷா கண்டனம்

DIN


இஃப்தார் விருந்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றதை விமரிசிக்கும் வகையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் டிவீட் செய்ததை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கண்டித்துள்ளார். 

பிகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நிதிஷ் குமார், லோக் ஜனஷக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் இஃப்தார் விருந்தில் பங்கேற்றனர். 

இதையடுத்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், நிதிஷ் குமார், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் இஃப்தார் விருந்தில் பங்கேற்ற புகைப்படத்தை வெளியிட்டு கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், தன் மதத்தைச் சேர்ந்த சடங்குகளில் பங்கெடுக்காமல், பிற மத வழக்கங்களைப் பின்பற்றுவது ஏன்? என்ற வகையில் கிரிராஜ் சிங் கேள்வி எழுப்பியிருந்தார். கிரிராஜ் சிங்கின் இந்த டிவீட் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா, கிரிராஜ் சிங்கை தொடர்புகொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்கு தனது கண்டிப்பை வெளிப்படுத்தினார். மேலும், வரும் காலங்களில் இதுபோன்ற கருத்துகள் பதிவிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT